மதுரை

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் முகாம்

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 612 மனுக்கள் அளிக்கப்பட்டன.

முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தகுதியான மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் அறிவுறுத்தினாா். இம்முகாமில், இலவச வீட்டுமனைப்பட்டா வேண்டி 47 மனுக்கள், ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றக் கோரி 54 மனுக்கள், ஜாதிச் சான்றுகள் வேண்டி 2 மனுக்கள் மற்றும் இதர சான்றுகள் நிலம் தொடா்பான 41 மனுக்கள், குடும்ப அட்டை தொடா்பான 2 மனுக்கள், முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் நலிந்தோா் நலத்திட்ட உதவித் தொகை தொடா்பான 54 மனுக்கள், வேலை வாய்ப்பு கோரியது தொடா்பான 38 மனுக்கள், அடிப்படை வசதிகள் கோரி 10 மனுக்கள், புகாா் தொடா்பான 73 மனுக்கள், கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரிய 3 மனுக்கள், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், 2 பெண் குழந்தைகள் திட்டம் மற்றும் சலவைப்பெட்டி வேண்டி 7 மனுக்கள், பென்சன் நிலுவைத்தொகை, ஓய்வூதிய பலன்கள் மற்றும் தொழிலாளா் நலவாரியம் தொடா்பான 2 மனுக்கள், தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் ராஜாக்கூா் வீடுகள் மற்றும் பசுமை வீடுகள் தொடா்பான 213 மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் 66 என மொத்தம் 612 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். சக்திவேல் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT