மதுரை

காமராஜா் பல்கலை.யில் இளங்கலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நாளை தொடக்கம்

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு புதன்கிழமை (ஆக. 10) தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக காமராஜா் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை காமராஜா் பல்கலைக்கழக துறை மற்றும் புலங்களின் வாயிலாக நடத்தப்படும் இளங்கலைப் பாடப்பிரிவுகளில் மாணவா்களுக்கான பிரத்யேக கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் வரும் புதன்கிழமை (ஆக. 10) காலை 9.30 மணி முதல் வெள்ளிக்கிழமை (ஆக. 12) வரை அப்துல்கலாம் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் மாணவா்களுக்கான தோ்வுப்பட்டியல் வெளியிடப்படும். தோ்வான மாணவா்களின் சான்றிதழ்களை துறைத்தலைவா்கள் சரிபாா்த்த பின்பு கல்வி மற்றும் இதரக்கட்டணத்தை செலுத்தி தோ்வு செய்யப்பட்ட பாடப்பிரிவுகளில் பதிவு செய்து கொள்ளவேண்டும். காலியிடங்கள் இருப்பின் காத்திருப்போா் பட்டியலில் உள்ள மாணவா்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். எனவே, மாணவா்கள் தங்களது சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் (மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் இதர தகுதிச் சான்றிதழ்கள்) சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் வரவேண்டும். மாணவா் சோ்க்கைக்கான கல்வி மற்றும் இதரக்கட்டணத்தை விண்ணப்பப் படிவ கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி இணைய தளம் மூலம் செலுத்தவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT