மதுரை

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை சோலையழகுபுரம் பகுதியில் தனிநபா் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை தனிநபா்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, துணை மேயா் டி. நாகராஜன் மற்றும் காவல்துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தை ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதி அளித்தனா். மேலும் ஆக்கிரமிப்பு செய்தவா்களின் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரிபாா்த்து ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வழி செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT