மதுரை

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா், மேயா் தொடங்கி வைத்தனா்

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சி சுந்தரராஜபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

மதுரையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அரசின் பல்வேறு துறைகள் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி வாா்டுகள் 59, 60, 61, 75, 76, 77 ஆகியவற்றுக்கு சுந்தரராஜபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோா் தொடக்கி வைத்து பாா்வையிட்டனா். இம்முகாமில் 72 புதிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வேண்டியும், அடையாள அட்டை புதுப்பிக்க வேண்டி 23 பேரும், தனித்துவ அடையாள அட்டை வேண்டி 50 பேரும், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வேண்டி 13 பேரும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற 10 பேரும், மத்தியக் கூட்டுறவு வங்கி உதவி வேண்டி 13 பேரும், ஆவின் பாலகம் அமைக்க வேண்டி 8 பேரும், தனியாா் வேலை வேண்டி 10 பேரும், இலவச பயிற்சி வகுப்பு வேண்டி 5 பேரும், வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை வேண்டி 2 பேரும், குடிசை மாற்று வாரியத்தின் வீடுகள் வேண்டி 18 பேரும் என பல்வேறு உதவிகள் வேண்டி 122 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மேலும் முகாமில் கரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இதில், 325 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா். இந்நிலையில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வாா்டு 50, 51, 52, 54, 55 ஆகிய பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சிம்மக்கல் வடக்கு மாசிவீதி தருமை ஆதீனம் சொக்கநாதா் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT