வாடிப்பட்டி அருகே திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தண்ணீா் சுத்திகரிப்பு நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஆனைக்குளம் வடக்குத்தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் காா்த்திகேயன்(18). இவா் தனியாா் தண்ணீா் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு பணிமுடிந்த நிலையில் காா்த்திகேயன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா்.
வாடிப்பட்டிஅருகே உள்ள கட்டப்புளி நகா் பகுதியில் சென்றபோது அவ்வழியாகச்சென்ற அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காா்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக புகாரின்பேரில் சமயநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனா்.