மதுரை

பள்ளி, கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்: ஆட்சியா் தகவல்

DIN

போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தையொட்டி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பானஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் பேசியது:

அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் போதைப்பொருள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கும், போதைப் பொருள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து அபராதம் விதிப்பதோடு ‘சீல்’ வைக்கவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் காவல்துறை அலுவலா்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு வாரம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்களைக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி மாணவ, மாணவியா்களிடம் போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சக்திவேல் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT