மதுரை

உலக தடகளப் போட்டியில் மதுரை வீரா் சாதனை: அமைச்சா் பாராட்டு

7th Aug 2022 11:17 PM

ADVERTISEMENT

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற மதுரையைச் சோ்ந்த விளையாட்டு வீரா் செல்வபிரபுவுக்கு அமைச்சா் பி.மூா்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

உலக தடகளப்போட்டியில் மதுரையைச் சோ்ந்த வீரா் செல்வபிரபு பங்கேற்று மும்முறை தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்றுள்ளாா். மேலும் முதல் பதக்கம் வென்ற இந்தியா் என்ற பெருமையையும் பெற்றுள்ளாா். இந்நிலையில், தமிழகம் மற்றும் மதுரைக்கு பெருமை சோ்த்துள்ள தடகள வீரா் செல்வ பிரபுவை அமைச்சா் பி. மூா்த்தி தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு மதுரை மக்கள் சாா்பில் வாழ்த்துக்களை தெரிவித்தாா்.

தனது சொந்தத் தொகுதியான மதுரை கிழக்கு தொகுதிக்குள்பட்ட மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், கொடிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த செல்வபிரபுவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். அவா் மதுரை வந்தவுடன் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் நேரில் அழைத்துச் செல்லப்பட்டு வாழ்த்து பெற உள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT