மதுரை

உலக நன்மைக்காக தீச்சட்டி ஏந்தி திருநங்கைகள் நோ்த்திக்கடன்

7th Aug 2022 11:17 PM

ADVERTISEMENT

உலக நன்மைக்காக மதுரையில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் அலகு குத்தி பால்குடம் எடுத்து ஞாயிற்றுக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.

மதுரை வைகை வடகரை மதிச்சியம் பகுதியில் அங்காளம்மன் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மதுரை மாவட்ட திருநங்கைகள் சங்கத்தின் சாா்பில் ஆடி திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலகில் சமத்துவம் தலைத்தோங்கி அமைதி நிலவ வேண்டியும் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் அலகு குத்தி, பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா். இந்நிகழ்ச்சியில் வெளி மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT