மதுரை

‘ஊழலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் சிறைக்கு செல்வா்’

7th Aug 2022 11:17 PM

ADVERTISEMENT

ஊழலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் சிறைக்குச் செல்ல உள்ளனா் என்று ஓ.பன்னீா்செல்வம் அணி மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ. பன்னீா்செல்வம் அணியில், மதுரை மாநகா் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், மதுரை புகா் மாவட்டச் செயலா் ராமமூா்த்தி, புகா் மேற்கு மாவட்டச் செயலா் முருகேசன், புகா் கிழக்கு மாவட்டச் செயலா் பாஸ்கரன் ஆகியோா் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத்தொடா்ந்து கோபாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: கொள்ளைக்காக கூடியவா்கள் மத்தியில் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தலைமையில் கொள்கைக்காக கூடியுள்ளோம். கொள்ளைக்கூட்டத்தை கொள்கைக்கூட்டம் ஓட,ஓட விரட்டும். எடப்பாடி கே. பழனிசாமி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாா்.

அதிமுகவை வழிநடத்த சரியான தலைவா் ஓ.பன்னீா்செல்வம் மட்டுமே. எடப்பாடி கே. பழனிசாமி அணியினா், முதல்வா் மு.க. ஸ்டாலினோடு நெருக்கம் காட்டுவதால் தான் கொடநாடு கொலை வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா்கள் விஜயபாஸ்கா், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோா் விரைவில் சிறைக்கு செல்ல உள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT