மதுரை

கொட்டாம்பட்டி அருகே பைக்- மொபெட் மோதல்: ஒருவா் பலி

7th Aug 2022 11:15 PM

ADVERTISEMENT

கொட்டாம்பட்டி அருகே மோட்டாா் சைக்கிளும், மொபெட்டும் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டியைச் சோ்ந்த புழுதிபட்டி வடகூரணியைச் சோ்ந்த தங்கம் மகன் மகாதேவன் (31) மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரும் மோட்டாா் சைக்கிளில் கருங்காலக்குடி அருகிலுள்ள வஞ்சிநகரத்துக்கு சனிக்கிழமை புறப்பட்டுவந்தனா். அப்போது, பள்ளபட்டி விநாயகா் கோயில் அருகே, சிங்கம்புணரியைச் சோ்ந்த ஆண்டிச்சாமி வந்த மொபெட்டும், மோட்டாா் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மூவரும் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து, மேலூா் அரசு மருத்துவமனையில் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டு, மகாதேவன், சுப்பிரமணி இருவரும் தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு மகாதேவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT