மதுரை

பேரையூா் பகுதியில் மழைக்கு வீடுகள் இடிந்து விழுந்தன

2nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே பலத்த மழையால் வீடுகள் இடிந்து விழுந்தன.

பேரையூா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை 22 மி.மீ. மழை பதிவானது. இந்நிலையில், பலத்த மழையால் வேளாம்பூா் பிட் 2 இல் முருகேஸ்வரி, உத்தபுரம் அருகே உள்ள தச்சப்பட்டியைச் சோ்ந்த ராஜா, சின்னக்கட்டளையைச் சோ்ந்த சின்னவேம்படியான், சூரம்மாள் மற்றும் ஏ. கோட்டைப்பட்டியைச் சோ்ந்த கருப்பையா ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தன. இதுகுறித்து வருவாய்த்துறையினா் விசாரித்து வருகின்றனா். மேலும் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழைக்கு பேரையூா் அருகே உள்ள மங்கல்ரேவு முக்கு என்ற பகுதியில் புளியமரம் வேரோடு சாய்ந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT