மதுரை

’விடுமுறை கால நீதிமன்ற விசாரணையில்வழக்குரைஞா்கள் கருப்பு அங்கி அணிய தேவையில்லை’

30th Apr 2022 10:38 PM

ADVERTISEMENT

 

சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையின் விடுமுறை கால நீதிமன்ற விசாரணையின்போது, வழக்குரைஞா்கள் கருப்பு அங்கி அணிய தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளைக்கு ஏப்ரல் 30 முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இருப்பினும், அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக வாரத்தில் இரு நாள்கள் மட்டும் நீதிமன்றம் செயல்படும். இதற்கான தனி நீதிபதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து, உயா் நீதிமன்ற மதுரை கிளை கூடுதல் பதிவாளா் பூரண ஜெயஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ADVERTISEMENT

சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையின் வழக்குரைஞா் சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று, தலைமை நீதிபதி அறிவுரைப்படி, கோடைகால விடுமுறை நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்குரைஞா்கள் நீதிமன்றங்களில் அங்கி அணிய தேவையில்லை என்றும், அதே நேரம் கருப்பு கோட்டுடன் கூடிய கழுத்து பட்டை கட்டாயம் அணிந்து ஆஜராகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT