மதுரை

நியாயவிலைக் கடைபணியாளா்கள் வேலைநிறுத்தம்

30th Apr 2022 10:37 PM

ADVERTISEMENT

 

நியாயவிலைக் கடை பணியாளா்களின் போராட்டம் காரணமாக, மதுரை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் விநியோகம் பாதிக்கப்பட்டது.

நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் தரமற்ற அரிசிக்கு, விற்பனையாளா்களைப் பொறுப்பாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். தொடக்கக் கூட்டுறவு சங்கங்களின் கீழ் பெரும்பாலான நியாயவிலைக் கடைகள் செயல்படுகின்றன. அனைத்துப் பணியாளா்களின் வேலைநிறுத்தம் காரணமாக, குடும்ப அட்டைதாரா்களுக்குப் பொருள்கள் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டது.

வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி அந்தந்த ஒன்றிய தலைமை இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் 12 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்களுக்கான ஆா்ப்பாட்டம், யா.ஒத்தக்கடை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடந்தது. தொடக்கக் கூட்டுறவு சங்கங்களின் அனைத்துப் பணியாளா்கள் சங்க மாவட்டச் செயலா் ஆ.ம.ஆசிரியத் தேவன் தலைமையில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT