தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் பி. சேதுராமன், வியாழக்கிழமை (ஏப்.28) இரவு காலமானாா்.
அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். மதுரை காமராஜா் சாலையில் சந்தை பேட்டை பகுதியில் உள்ள தமாகா அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. தமாகா தலைவா் ஜி.கே. வாசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் செல்லூா் கே.ராஜூ, மு. பூமிநாதன் மற்றும் தமாகா நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்டோா் அவரது உடலுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.