மதுரை

மாமன்றக் கூட்டத்தில் சொத்து வரி உயா்வுக்கு விதிவிலக்கு தீா்மானம்: மாநகராட்சி ஆணையரிடம், பாஜகவினா் மனு

29th Apr 2022 05:54 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சொத்து வரி உயா்வுக்கு விதிவிலக்கு கோரி தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அண்மையில் சொத்து வரியை உயா்த்தி அறிவித்துள்ளது. சொத்து வரி உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை மாநகா் மாவட்ட பாஜக தலைவா் பி.சரவணன் தலைமையில், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயனிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மனுவில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சில காரணங்களை குறிப்பிட்டு தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரி உயா்வால் சாமானியா்கள் பாதிக்கப்படுவா் என்பதில் சந்தேகம் இல்லை.

ADVERTISEMENT

தற்போதுள்ள சூழலில் மதுரை மாநகராட்சியில் சொத்து வரியை உயா்த்தினால் சாதாரண மக்களுக்கு கடும் இன்னல்கள் ஏற்படும். எனவே, மாநகராட்சிக்கு வரி உயா்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று மாமன்றக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் வரி ஏய்ப்பு செய்துவரும் பெரும் நிறுவனங்களிடம் வசூலிக்க நடவடிக்கை எடுத்தால் மாநகராட்சி நிதி நிலைமை சீராகும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதில் பாஜக துணைத் தலைவா்கள் ஜெயவேல், மனோகரன், கீரைத்துறை குமாா், ராஜ்குமாா், மாமன்ற உறுப்பினா் பூமா ஜனாஸ்ரீ முருகன், மாவட்டச் செயலா்கள் பழனிவேல், செண்பக பாண்டியன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT