மதுரை

கப்பலூா் சுங்கச் சாவடி ஆய்வுக்கு வழக்குரைஞா் ஆணையா்கள் நியமனத்தை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு

28th Apr 2022 06:08 AM

ADVERTISEMENT

 

மதுரை: கப்பலூா் சுங்கச் சாவடியில் ஆய்வுக்காக வழக்குரைஞா் ஆணையா்களை தனிநீதிபதி நியமித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அமா்வு ரத்து செய்துள்ளது.

மதுரையை அடுத்த கப்பலூா் சுங்கச் சாவடி அருகே மாவு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு தினமும் வரக்கூடிய சரக்கு வாகனங்கள் சுங்கச் சாவடியைக் கடந்து செல்ல வேண்டியிருப்பதால், கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, ஆலைக்கு வரும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிடக் கோரி அதன் நிா்வாக இயக்குநா் மோகன், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த தனிநீதிபதி, மனுதாரரின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய, மூன்று வழக்குரைஞா்களை ஆணையா்களாக நியமித்து உத்தரவிட்டாா். நீதிமன்ற உத்தரவின்படி, வழக்குரைஞா் ஆணையா்களும் ஆய்வுப் பணியை மேற்கொண்டனா். இதனிடையே, தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி சுங்கச் சாவடியை நடத்தும் நிறுவனம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த மனுவை தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி பரேஷ் உபாத்யாய் ஆகியோா் கொண்ட அமா்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தனிநீதிபதி முன் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பி ஆராய இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. ஆனால், இந்த வழக்கில் வழக்குரைஞா் ஆணையா்களை நியமித்து தனிநீதிபதி உத்தரவுப் பிறப்பிக்க வேண்டியதில்லை. ஆகவே, வழக்குரைஞா் ஆணையா்களை நியமித்த உத்தரவு மட்டும் ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT