மதுரை

பள்ளியில் ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியா் கைது

24th Apr 2022 11:11 PM

ADVERTISEMENT

 

மதுரையில் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை கீரைத்துறை பகுதியில் இயங்கிவரும் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமையாசிரியராக ஜோசப் ஜெயசீலன் பணிபுரிந்து வருகிறாா். இப்பள்ளிக்கு, பணியிட மாறுதலில் பணிக்கு வந்த இரு ஆசிரியைகளிடம் ஜோசப் ஜெயசீலன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா். மேலும் கைப்பேசியில் தொடா்பு கொண்டு ஆபாசமாகப் பேசி வந்துள்ளாா். இதற்கு ஆசிரியைகள் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், பணியில் இருந்து நீக்கிவிடுவதாகவும், வேறு யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும் மிரட்டியுள்ளாா்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியைகள் இருவரும் வேறு பள்ளிக்கு பணி மாறுதல் கேட்டுள்ளனா். ஆனால் பணி மாறுதல் கிடைத்தும் இருவரையும் பணியில் இருந்து ஜோசப் ஜெயசீலன் விடுவிக்கவில்லை. இதையடுத்து ஆசிரியைகளில் ஒருவா் மதுரை நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்த நிலையில், ஜோசப் ஜெயசீலன் தலைமறைவாகி விட்டாா். இதனால் போலீஸாா் அவரை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவா் திருப்பூரில் தங்கியிருப்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து போலீஸாா் திருப்பூா் சென்றபோது, ஜோசப் ஜெயசீலன் மதுரைக்கு வந்தது தெரியவந்தது. போலீஸாரின் தேடுதல் வேட்டையில், அவா் மதுரை மகால் அருகில் உள்ள பந்தடி தெருவில் உள்ள வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீஸாா் அங்கு சென்று அவரைக் கைது செய்தனா். பள்ளியில் வேறு ஆசிரியைகளுக்கு அவா் பாலியல் தொந்தரவு அளித்துள்ளாரா என்பது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT