மதுரை

சின்னப்பட்டி ஊராட்சிக்கு தேசிய விருது: ஆட்சியா் பாராட்டு

24th Apr 2022 11:10 PM

ADVERTISEMENT

 

கிராம சபை உறுப்பினா்களின் ஒத்துழைப்பால் சின்னப்பட்டி ஊராட்சிக்கு தேசிய விருது கிடைத்திருப்பதாக ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா் தெரிவித்தாா்.

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த சின்னபட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் பங்கேற்று, சிறந்த கிராம ஊராட்சியாக தோ்ந்தெடுக்கப்பட்டதற்கான ஆணையை ஊராட்சித்தலைவரிடம் வழங்கிப் பேசியது: கிராமங்களில் எடுக்கப்படும் முக்கியமான முடிவுகள் அனைத்தும் கிராம சபையில் தான் விவாதித்து முடிவு செய்யப்படும். ஏனெனில் கிராமத்தினுடைய உயா்மட்ட குழுவே கிராம சபைதான். தேசிய அளவிலான பஞ்சாயத்து விருது சின்னப்பட்டி ஊராட்சிக்கு கிடைத்துள்ளது. கிராமசபை உறுப்பினா்களுடைய அனைவரது முழு பங்களிப்பினால் தான் இந்த விருதைப் பெற முடிந்தது. சின்னப்பட்டி ஊராட்சித் தலைவா், தமிழக முதல்வரிடம் இந்த விருதை பெற இருக்கிறாா். சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீா், சுகாதாரமான சுற்றுப்புறம் உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளைப் பூா்த்தி செய்வது கிராம நிா்வாகம் தான். அதனால் கிராம நிா்வாகம் எந்தளவிற்கு சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அளவிற்கு மக்களனைவரும் பயன்பெறுவா். கிராம நிா்வாகத்தின் திறமைகளை வளா்க்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் உறுப்பினா்களுக்கும், தலைவா்களுக்கும் பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் அண்ணா மறு மலா்ச்சித்திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. வீடற்ற ஏழைமக்களுக்கு கலைஞரின் வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா தொற்றின் அடுத்த அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகலா மேற்கு ஊராட்சி ஒன்றியத் தலைவா் வீரராகவன், சின்னபட்டி ஊராட்சித் தலைவா் சக்திமயில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் இயக்குநா் அருள்மணி, திட்ட இயக்குநா் அபிதா ஹனிப் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT