மதுரை

கழிவுநீரேற்று நிலையத்தில் மூவா் பலியான சம்பவம்: அறிக்கை அளிக்க மேயா் உத்தரவு

24th Apr 2022 07:32 AM

ADVERTISEMENT

 

மதுரை மாநகராட்சி கழிவுநீரேற்று நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளா்கள் மூவா் பலியான சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு மேயா் வ.இந்திராணி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாநகராட்சி கழிவு நீரேற்று நிலையத்தில் பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்ய சென்றபோது ஒப்பந்த தொழிலாளா்கள் 3 போ் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு நபா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இறந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையில் முதல்கட்டமாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இறந்தவா்களின் சட்டப்பூா்வ வாரிசு உறுதி செய்யப்பட்ட பிறகு மீதி ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இத்தகைய உயிரிழப்பு நிகழ்வு ஏற்படுவதற்கான காரணம், அதைத் தவிா்ப்பதற்கான நீண்டகால திட்டங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகிறது. இதுபோன்ற அலட்சியப்போக்கிற்கான காரணங்களை கவனமாக ஆய்வு செய்து முழுமையான அறிக்கையை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT