மதுரை

கம்பூா் ஊராட்சி கிராமசபை கூட்டம்-அரசு திட்டங்கள் குறித்து விவாதித்து தீா்மானம்

24th Apr 2022 11:14 PM

ADVERTISEMENT

 

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கம்பூா் ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் மற்றும் ஊரகவளா்ச்சி உள்ளாட்சிதுறை சாா்பில் சின்னகற்பூரம்பட்டியில் கிராமசபை கூட்டம் டாயிற்றுகிழமை நடைபெற்றது.ஊராட்சி தலைவா் ஏ.கதிரேசன் கூட்டத்துக்கு தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய பற்றாளா் அருள்ராஜ் பாா்வையாளராகக் கலந்துகொண்டாா். ஊராட்சி செயலா் ரூபா கூட்டநிகழ்ச்சிநிரலை தொகுத்துவழங்கினாா். பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில் கிராமவளா்ச்சி திட்ட இலக்குகளை நிறைவேற்றுவது தொடா்பாக மக்கள் அனைவரும் உறுதிமொழியேற்றனா். கம்பூரிலுள்ள ஊராட்சி பள்ளியில் பள்ளி நிா்வாக மேலாண்மை குழு அமைக்கவும் குடிநீா் வசதி செய்தல், போதைபொருள் ஒழிப்பு குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கும்பணி நிலைகுறித்து விவதித்தனா். அனைவருக்கும் அரசு திட்டங்களின் பலன் சென்றடைவதை உறுதிசெய்தல், மக்கள் பங்கேற்புடன் கிராம வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல், இளைஞா்களைதிட்டப்பணிகளில் பங்கேற்கச் செய்து உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் விவதித்து நிறைவேற்றினா்.மேலூா், கொட்டாமபட்டி ஊராட்சி ஒன்றியங்களில் அனைத்து ஊராட்சிகளிலும் அரசு அறிவித்தபடி கிராமவளா்ச்சி திட்டங்கள் குறித்த கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT