மதுரை

ஈஸ்டா் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

17th Apr 2022 11:00 PM

ADVERTISEMENT

 

மதுரை தேவாலயங்களில் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிா்த்தெழுந்த நாள் ஈஸ்டா் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையையொட்டி கிறிஸ்தவா்கள் மாா்ச் 2 சாம்பல் புதன்கிழமையன்று 40 நாள்கள் தவக்காலத்தை தொடங்கினா். இதைத்தொடா்ந்து குருத்தோலை ஞாயிறு மற்றும் இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி போன்றவற்றையொட்டி சிறப்பு வழிபாடுகள், திருப்பலிகள் நடைபெற்றன.

இந்நிலையில் இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுந்ததையொட்டி ஈஸ்டா் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது. மதுரை நரிமேடு கதீட்ரல் தேவாலயம், புனித வளனாா் தேவாலயம், தூய மரியன்னை தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும் நற்கருணை, சிறப்பு திருப்பலிகள், ஆராதனைகள் உள்ளிட்டவையும் நடைபெற்றன. இதில் பங்குத்தந்தைகள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

உசிலையில்... இதேபோல உசிலம்பட்டியில் பேரையூா் சாலையிலுள்ள தேவாலயத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. அப்போது இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுந்த சம்பவத்தை விளக்கும் வேதாகம செய்தி அளிக்கப்பட்டது. இதில், திரளானோா் கலந்துகொண்டனா் .

ADVERTISEMENT
ADVERTISEMENT