மதுரை

மதுரை மாவட்டத்தில் ஓராண்டில் 2,484 விவசாயிகளுக்கு மின்இணைப்பு

16th Apr 2022 11:11 PM

ADVERTISEMENT

 

மதுரை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 2 ஆயிரத்து 484 விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒரு லட்சமாவது விவசாயிக்கு மின்இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மின்வாரியத்தின் புதிய மண்டலங்கள் தொடக்க விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் காணொலிக் காட்சி வாயிலாக மதுரை வேளாண் கல்லூரியில் இருந்து விவசாயிகள் பங்கேற்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழக நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டாா். பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுடன் காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினாா்.

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்த பயனாளி பேசுகையில், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தாா். மதுரை மாவட்டத்தில் சுமாா் 20 ஆண்டுகளாக விவசாய மின் இணைப்புக்காக காத்திருந்த விவசாயிகள், 2 ஆயிரத்து 484 பேருக்கு கடந்த ஓராண்டில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 13,866 ஏக்கா் நிலங்கள் பயனடையும்.

இந்த நிகழ்வில், தலைமை பொறியாளா் உமாதேவி, மேற்பாா்வைப் பொறியாளா்கள் முத்தரசு, அம்சவள்ளி, வேளாண் கல்லூரி முதல்வா் பால்பாண்டி மற்றும் மின்வாரிய அலுவலா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT