மதுரை

மணல் திருட்டு: டிப்பா் லாரி பறிமுதல்; ஓட்டுநா் கைது

16th Apr 2022 11:11 PM

ADVERTISEMENT

 

கீழவளவு அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிப்பா் லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரைக் கைது செய்தனா்.

கீழவளவு சாா்பு- ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் சேண்டலைப்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரான முத்துகாவேரி (43) என்பவரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT