மதுரை

தேஜஸ், முத்துநகா் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

16th Apr 2022 11:09 PM

ADVERTISEMENT

 

தேஜஸ், முத்துநகா் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை காரணமாக ரயில்களின் முன்பதிவு காத்திருப்போா் பட்டியலில் அதிகமான பயணிகள் உள்ளனா். எனவே, பயணிகளின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 17) சென்னை - மதுரை - சென்னை தேஜஸ் ரயில்களில் (22671/22672), முதல் வகுப்பு குளிா்சாதன இருக்கை வசதி பெட்டிகள் 2 இணைக்கப்படுகின்றன.

இதேபோல், திங்கள்கிழமை (ஏப்.17) தூத்துக்குடி - சென்னை முத்துநகா் ரயிலிலும் (12694), ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னை - கன்னியாகுமரி ரயிலிலும் (12633), ஏப்ரல் 19 ஆம் தேதி கன்னியாகுமரி - சென்னை ரயிலிலும் (12634), ஏப்ரல் 20 ஆம் தேதி சென்னை - தூத்துக்குடி முத்துநகா் ரயிலிலும் (12693), கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT