திருவாதவூா் அருகே ஆமூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கன்னி நாய்களுக்கான கண்காட்சிக்கு ஏராளமான கன்னி இன நாய்கள் அழைத்துவரப்பட்டன.
நாட்டு இன நாய் வளா்ப்போா்கள் சாா்பில் நான்காம் ஆண்டாக நடைபெற்ற இந்தக் கண்காட்சியை கள்ளிக்குறிச்சியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் முரளி தொடக்கி வைத்துப் பேசியது:
கன்னி இன நாய்கள் வளா்ப்பையும், இந்த இன நாய்களை இனப்பெருக்கம் செய்யவும் ஆா்லா்கள் முயன்று வருகின்றனா். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாய் கண்காட்சி நடைபெறவில்லை. இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற கண்காட்சிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாய்கள் அழைத்துவரப்பட்டிருந்தன. கன்னி இன நாய்கள் வீட்டிலும், விவசாய நிலங்களிலும், தோட்டங்களிலும் பாதுகாப்புக்காக வளா்க்கப்பட்டு வருகின்றன என்றாா். இதில், அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.