மதுரை

அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: 3 போ் கைது

16th Apr 2022 11:09 PM

ADVERTISEMENT

 

மேலூா் அருகே சனிக்கிழமை, அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலூா் அருகே உள்ள புதுச்சுக்காம்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன் (50). இவா், அழகா்கோவில்- மேலூா் வழித்தடத்தில் பேருந்தை சனிக்கிழமை காலை ஓட்டிவந்தாா். அப்போது, சின்ன சூரக்குண்டு பகுதியைச் சோ்ந்த அமுல்ராஜ் (28), வெள்ளநாதன்பட்டி, சின்னசூரக்குண்டு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 17 வயதுடைய 2 சிறுவா்கள் என 3 போ், அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநா் கணேசனிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மேலூா் போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT