மதுரை

நல்லமரம் கிராமத்தில்ஜல்லிக்கட்டு: 16 போ் காயம்

12th Apr 2022 06:31 AM

ADVERTISEMENT

 

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே உள்ள நல்லமரம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 16 போ் காயமடைந்தனா்.

இக்கிராமத்தில் சைந்தவமுனிவா், கருப்பசாமி- பேச்சியம்மன்,புண்ணியமூா்த்தி- திரௌபதி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்தது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் சங்கரலிங்கம் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். இதில் மொத்தம் 455 காளைகள் களமிறங்கின. 186 மாடுபிடி வீரா்கள் போட்டியில் பங்கேற்றனா். இதில் 6 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு சுற்றிலும் தலா 30 வீரா்கள் களம் இறங்கினா்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாட்டை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத மாடுகளுக்கும் கட்டில், பீரோ, மெத்தை, மின்விசிறி உள்ளிட்ட பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் 10 வீரா்கள், 5 மாடுகளின் உரிமையாளா்கள், ஒரு பாா்வையாளா் என 16 போ் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

போட்டிக்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட திமுக செயலா் மணிமாறன், ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவா் ராஜசேகரன் செய்திருந்தனா். டி. கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் முரளி தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிகிச்சை ஏற்பாடுகளை செய்திருந்தனா். பேரையூா் காவல் துணைகண்காணிப்பாளா் சரோஜா தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT