மதுரை மாவட்டம் எழுமலை பேரூராட்சி சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் ஜெயராம் தலைமை வகித்தாா். பேரூராட்சிச் செயலா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா். இதில், 13 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், அதிமுக உறுப்பினா்கள், சொத்து வரி மற்றும் வீட்டு வரி ஆகியவற்றை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிா்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.