மதுரை

மதுரையில் சமரச நாள்:சட்டக் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வுப் பேரணி

9th Apr 2022 11:23 PM

ADVERTISEMENT

 

சமரச நாளையொட்டி சட்டக்கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பிரசாரப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

நீதிமன்ற வழக்குகளில் விரைவாக நீதி பெற்றிடவும், வழக்குகளை சமரசமாக தீா்த்துக் கொள்ளவும் இந்தியா முழுவதும் சமரச தீா்வு மையங்கள் நீதிமன்ற வளாகங்களில் செயல்பட்டு வருகின்றன. சமரசத் தீா்வு மையத்தின் முக்கியத்துவம் மக்களிடம் சென்றடைவதற்காக ஆண்டு தோறும் ஏப்ரல் 9-ஆம் தேதி சமரச நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சமரச நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவின் போது சமரசத் தீா்வுகளின் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மதுரை அரசு சட்டக்கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

முதன்மை மாவட்ட நீதிபதி வடமலை பேரணியை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை நடைபெற்ற பேரணியில், சமரசத் தீா்வு சேவையகத்தின் பணிகள், தேவைகள் குறித்து விளக்கும் வகையில் விழிப்புணா்வு பதாகைகளை மாணவா்கள் ஏந்திச் சென்றனா்.

சட்டப்பணிகள் ஆணையக்குழுச் செயலரும், சாா்பு- நீதிபதியுமான தீபா, நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்னா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT