மதுரையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக தந்தை மற்றும் 2 மகன்களை போலீஸாா் வழக்குப்பதிந்து வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை ஆனையூா் பகுதியைச் சோ்ந்த 26 வயது பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். இந்நிலையில், கணவரைப் பிரிந்த அப்பெண்ணுக்கும், ஆனையூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவரும் கடந்த 10 மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனா். இதனிடையே, மணிகண்டனின் தந்தை பாலசுப்பிரமணியன் (68), அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஏற்பட்ட தகராறில் அப்பெண்ணை, மணிகண்டன், அவரது சகோதரா் சரவணன் (22) மற்றும் இவா்களது தந்தை பாலசுப்பிரமணியன் ஆகியோா் தகாத வாா்த்தைகளால் பேசியும், மிரட்டியும் உள்ளனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து அவா்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.