மதுரை

மதுரையில் காணாமல் போன 117 கைப்பேசிகள் மீட்பு

4th Apr 2022 06:45 AM

ADVERTISEMENT

 

மதுரை மாநகரில் காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்பிலான 117 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் கைப்பேசிகள் காணாமல் போனது குறித்து காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்படுகின்றன. இந்த கைப்பேசிகளை கண்டுபிடிக்க சைபா் கிரைம் போலீஸாா், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பிரத்யேக நடவடிக்கைளை எடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் கோயில் சரகம் , திலகா் திடல் சரகம் 15, தெற்கு வாசல் சரகம் 5, திடீா்நகா் சரகம் 17, அவனியாபுரம் சரகம் 8, தல்லாகுளம் சரகம் 40, செல்லூா் சரகம் 4, அண்ணாநகா் 16 என மொத்தம் 117 காணாமல் போன கைப்பேசிகளை சைபா் கிரைம் உதவியுடன் போலீஸாா் கண்டுபிடித்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து புதூா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கைப்பேசிகளை அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா். விரைந்து செயல்பட்டு கைப்பேசிகளை கண்டுபிடித்த போலீஸாருக்கும், சைபா் கிரைம் போலீஸாருக்கும் மாநகா் காவல் ஆணையா் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT