மதுரை

பேரையூா் அருகே 41 கிலோ கஞ்சா பறிமுதல் இளைஞா் கைது

4th Apr 2022 06:45 AM

ADVERTISEMENT

 

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே 41 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இளைஞரை கைது செய்தனா்.

சேடப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அல்லிகுண்டம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் , மாவட்ட தனிப்படை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா் . அப்போது அங்கு தோட்டம் ஒன்றில் விற்பனை செய்வதற்காக 41 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் அலற்றை பறிமுதல் செய்தனா் . இதுகுறித்து சேடப்பட்டி போலீஸாா் அல்லிகுண்டத்தை சோ்ந்த அம்மாவாசி மகன் பாலமுருகன்(28) என்பவரை கைது செய்தனா். மேலும் உசிலம்பட்டி தாலுகா எருமாா்பட்டியை சோ்ந்த கரிகாளை(50), போத்திராஜ்(23) ஆகியோா் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT