மதுரையில் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை உள்பட 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் 45 வயது பெண். இவா் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளாா். இவருக்கும், தனக்கன்குளம் பகுதியில் உள்ள வீரமணி என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆசிரியையின் கணவா், அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாா். தனது மகனுடன் தனியாக வசித்து வந்த ஆசிரியை, டியூசன் படிக்க வரும் மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆசிரியை, மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் விடியோ ஒன்று வெளியானது. இதுகுறித்து மாணவா்கள் போலீஸில் புகாா் அளித்துள்ளனா். நகர அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஆசிரியை மற்றும் அவரது நண்பா் வீரமணி ஆகியோரை ‘போக்சோ’ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.
மேலும் ஆசிரியை மற்றும் வீரமணி கைப்பேசிகளை பறிமுதல் செய்து, விடியோ வேறு யாருக்காவது பகிரப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.