மதுரை

முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

30th Oct 2021 09:30 AM

ADVERTISEMENT

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும்  குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தெப்பக்குளம் சந்திப்பில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இதையும் படிக்க- தூத்துக்குடியில் கனமழை: கீழூருக்குப் பதில் மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட முத்துநகர் ரயில்

ADVERTISEMENT

அதன்பிறகு பசும்பொன் கிராமத்திற்கு சென்றார். தமிழக அமைச்சர்கள் ஐ பெரியசாமி, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், பி மூர்த்தி, பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் 
எஸ்.அனீஷ் சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT