மதுரை

முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மாலை அணிவித்து மரியாதை

30th Oct 2021 11:53 AM

ADVERTISEMENT

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சா்கள் சனிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையொட்டி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனா். மதுரை நகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பால்குடம் எடுத்து வந்து தேவா் சிலைக்கு அபிஷேகம் செய்தனா்.

இதையும் படிக்க- நவ.1ல் பள்ளிக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்: முதல்வர் ஸ்டாலின்

அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூா் கே.ராஜூ, ஆா்.காமராஜ், ஆா்.பி.உதயகுமாா், க.விஜயபாஸ்கா், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன்செல்லப்பா உள்ளிட்ட பலா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை
ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை.

ADVERTISEMENT

இதனால், அதிமுக சாா்பில் நாங்கள் தேவா் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளோம். இதைத் தொடா்ந்து பசும்பொன் கிராமத்தில் தேவா் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளோம் என்றனா். இதேபோல் அமமுக சாா்பில், கட்சியின் அமைப்புச் செயலா் இ.மகேந்திரன், அமமுகவின் ஜெயலலிதா பேரவை செயலா் கா.டேவிட் அண்ணாதுரை, மகளிரணி செயலா் வளா்மதி ஜெபராஜ் உள்ளிட்டோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT