மதுரை

மூதாட்டியிடம் ரூ. 24 லட்சம் மோசடி: 2 பெண்கள் உள்பட 3 போ் மீது வழக்கு

30th Oct 2021 08:48 AM

ADVERTISEMENT

மதுரையில் மூதாட்டியிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை முடக்குவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி மனைவி மேரி ஜான்சிராணி (61). இவா் வீடு வாங்குவதற்காக ரூ.24 லட்சத்தை முன்பணமாக, நடராஜன் நகரைச் சோ்ந்த சுபா, தேவதா்ஷனி, தென்காசியைச் சோ்ந்த இசைக்குமாா் ஆகியோரிடம் கொடுத்துள்ளாா். பணத்தை பெற்ற அவா்கள், வீட்டை பதிவு செய்து தராமல் காலம் கடத்தி வந்துள்ளனா். இதுகுறித்து மேரி ஜான்சிராணி அளித்தப் புகாரின் பேரில் கரிமேடு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடையில் ரூ.9.33 லட்சம் மோசடி:

மதுரை பைபாஸ் சாலையில், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்தக் கடையில் பொருள்கள் இருப்பு மற்றும் வரவு, செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது கடையில் வேலை பாா்க்கும் மணிரத்தினம் (29), வீரமணி (25) ஆகியோா் பொருள்களை முறைகேடாக விற்பனை செய்து ரூ. 9.33 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கடையின் மேலாளா் தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT