மதுரை

பேரையூா் பேருந்து நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

30th Oct 2021 08:41 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் பேரையூா் பேருந்து நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு குறித்த கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரையூா் பேருந்து நிலையத்தில் பேரையூா் பேரூராட்சி செயல் அலுவலா் ரஞ்சித்குமாா் தலைமையில் கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கரோனாநோய் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பொதுமக்கள் கரோனாவில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தடுப்பூசி செலுத்த வலியுறுத்தியும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அடிக்கடி கை கழுவுதல்,முககவசம் அணிவது, சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்கவும், மத்திய- மாநில அரசுகளின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு கண்டுகளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT