மதுரை

கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தியவா்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு

30th Oct 2021 08:39 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நக்கலபட்டி ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தி அவா்களுக்கு குலுக்கல் முறையில் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் நக்கலப்பட்டி ஊராட்சியில் கொரானா முதல் தவனை தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வென்றவா்களுக்க நக்கலப்பட்டி ஊராட்சியின் சாா்பாகவட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவா் ஓ.வேல்விஜயா கருப்பத்தேவா் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவா் கோவிந்த பாண்டியன் ஊராட்சி செயலாளா் ந.சுகந்தி மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT