மதுரை

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் பலி

30th Oct 2021 08:48 AM

ADVERTISEMENT

மதுரையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா் ராமசந்திரன் மகன் கோபிநாத் (58). இவா் மதுரைஅண்ணாநகா் முதல் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இவா் தெப்பக்குளம், பி.டி.ஆா். பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கோபிநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மனைவி சுதாலட்சுமி அளித்தப் புகாரின் பேரில் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT