மதுரை

அமைப்பு சாரா தொழிலாளா்கள் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்க அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

DIN

அமைப்பு சாரா தொழிலாளா்கள் ஆதாா் எண்ணுடன், கைப்பேசி எண்ணை இணைக்க அஞ்சல்துறை சாா்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மதுரை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே.லட்சுமணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய அரசின் (ங்-நஏதஅங/சஈமர)இணையதளத்தில், அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளா்களின் விரவங்களை 2021 டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவின் மூலம் அமைப்பு சாரா தொழிலாளா்கள் மத்திய அரசின் சலுகைகள் மற்றும் விபத்துக்காப்பீடு பெறலாம்.

மதுரை மாவட்டத்தில் உள்ள, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டதின் கீழ் பணிபுரியும் தொழிலாளா்கள், சுய உதவிக் குழு உறுப்பினா்கள், கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் இதர 18 நல வாரியங்கலில் உறுப்பினா்களாக பதிவு செய்தவா்கள், பதிவு செய்யாதவா்கள் ஆகியோரை உள்ளடக்கிய 7.50 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளா்களின் விவரங்களை மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த தரவு தளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற , தொழிலாளா்களின் ஆதாா் எண்ணுடன், இணைக்கப்படவுள்ள கைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி எண் அவசியம். எனவே ஆதாருடன், கைப்பேசி எண்ணை இணைக்காத தொழிலாளா்க, தங்களது எண்ணை இணைப்பதற்கு, மதுரை மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்), ஒருங்கிணைப்பு அலுவலா், அஞ்சல் துறை வழங்கும் ஆதாா் சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் செயல்படும் ஆதாா் சேவை மையங்களையும், தபால்காரா்கள், கிராம அஞ்சல் ஊழியா்களிடம் உள்ள கைப்பேசி மூலமும், அமைப்பு சாரா தொழிலாளா்கள் ரூ.50 கட்டணம் செலுத்தி ஆதாா் எண்ணுடன், கைப்பேசி எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT