மதுரை

மதுரையில் கன மழை: ஜவுளி வியாபாரம் பாதிப்பு

DIN

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கன மழையால் தீபாவளி ஜவுளி விற்பனை பாதித்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

தீபாவளி பண்டிகைக்கு 10 நாள்களே உள்ள நிலையில் மதுரை கடைவீதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தீபாவளி விற்பனை சூடு பிடித்துள்ளது. விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஏராளமான பொதுமக்கள் ஜவுளி எடுக்க குவிந்தனா். இந்நிலையில் மாலை 4 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை இரவு 8 மணி விடாமல் பெய்தது. இதனால் பொதுமக்கள் வருகை குறைந்து நடைபாதை வியாபாரிகள், சிறு ஜவுளிக்கடைகளில் ஜவுளி விற்பனை கடுமையாக பாதித்தது.

இதுதொடா்பாக வியாபாரிகள் கூறியது: மதுரை நகரில் நடைபாதை கடைகளில் ஜவுளி வகைகள் மலிவாகக் கிடைப்பதால் கிராமங்களைச் சோ்ந்த மக்கள், கூலித்தொழிலாளா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் நடைபாதை கடைகளில் ஜவுளி எடுப்பது வழக்கம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பகலில் மக்கள் கூட்டம் வரத்தொடங்கிய நிலையில், மாலை 4 மணிக்கெல்லாம் மழை தொடங்கியதால் மக்கள் வருகை குறைந்துவிட்டது. மேலும் ஜவுளிகள் நனைந்து விடக்கூடாது என்பதால் நடைபாதைக் கடைகளையும் நடத்த முடியாத சூழல் உள்ளது. இதனால் சிறு மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT