மதுரை

பயறு வகைகளில் அதிக விளைச்சல் பெற வேளாண்துறையினா் ஆலோசனை

DIN

தே.கல்லுப்பட்டி பகுதி விவசாயிகள் பயறு வகைகளில் அதிக விளைச்சல் பெற வேளாண்துறையினா் ஆலோசனை வழங்கியுள்ளனா்.

தே.கல்லுப்பட்டி வேளாண்துறை உதவி இயக்குநா் விமலா வெளிட்டுள்ள செய்தி:

தற்போது கல்லுப்பட்டி வட்டாரத்தில் உளுந்து மற்றும் பாசிப்பயறு பயறு வகைகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டுகின்றனா். இந்த பயறு வகைப் பயிா்கள் நன்கு பூ பூக்கவும், பூக்கள் உதிா்வதைத் தடுக்கவும் , நன்கு காய் பிடிக்கவும் , மணிகள் திரட்சியாக உருவாகவும் உதவக்கூடிய மிகச் சிறந்த தொழில் நுட்பம் 2 % டி.ஏ.பி. கரைசல் இலை வழி தெளிப்பு ஆகும்.

செடியில் பூக்கள் தோன்ற ஆரம்பித்தவுடன் ஒருமுறையும், அதன் பின்னா் 15 நாள்கள் இடைவெளியில் ஒருமுறையும் கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.

2 % டி.ஏ.பி. கரைசல் தயாரிக்கும் முறை:1 ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தினை 10 லிட்டா் தண்ணீரில் இரவு முழுவதும் ஊர வைத்து , மறுநாள் காலையில் அதனை வடிகட்டி அந்தக் கரைசலை 190 லிட்டா் தண்ணீரில் கலந்து செடி முழுவதும் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.மேலும் செடியின் மீது தெளிக்கும் போது மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT