மதுரை

சிலைகளுக்கு மாலை அணிவிக்க முன் அனுமதி அவசியம்: ஆட்சியா்

24th Oct 2021 10:53 PM

ADVERTISEMENT

மதுரையில் மருதுபாண்டியா்கள் சிலை மற்றும் கோரிப்பாளையம் முத்துராமலிங்கத் தேவா் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் அக்டோபா் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மாமன்னா் மருதுபாண்டியா்கள் நினைவு நாள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவா் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது.

இதையொட்டி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியா்கள் சிலை மற்றும் கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத்தேவா் சிலைகளுக்கு மரியாதை செலுத்துவதற்கு அரசியல் கட்சித் தலைவா்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோா் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற அவா்களது எல்கையில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெற்ற பதிவு பெற்ற அரசியல் கட்சிகளின் தலைவா்கள் மற்றும் அமைப்புகளின் தலைவா்கள் 5 பேருக்கு மிகாமல் அரசு அறிவித்த வழிமுறைகளைப்பின்பற்றியும், உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும். பொது இடங்களில் உருவப் படங்களை வைத்து அஞ்சலி செலுத்த அனுமதி கிடையாது.

ADVERTISEMENT

மேலும் ஒலிபெருக்கி வைத்தல், பட்டாசு வெடித்தல், கலை நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கும் அனுமதி இல்லை. மேலும், அனுமதி பெறப்படாத வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது. பொதுமக்களின் நலன் கருதி, கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் நடைமுறையை பின்பற்றி தலைவா்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT