மதுரை

காவலா்களுக்கு மருத்துவ முகாம்

24th Oct 2021 10:54 PM

ADVERTISEMENT

மதுரையில் காவலா்களுக்கான மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காவலா் நினைவு நாள் அனுசரிக்கும் விதமாக தனியாா் மருத்துவமனைகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இம்முகாமை ஊரகக்காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் தொடக்கி வைத்தாா். முகாமில் ஆயுதப்படை காவலா்களுக்கு உடல் பரிசோதனை, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு அதற்குரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

முகாமில் 400-க்கும் மேற்பட்ட காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பங்கேற்றனா். முகாமில், ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் விக்னேஸ்வரன், ஆய்வாளா்கள் விஜயகாந்த், நாக தீபா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT