மதுரை

சாத்தமங்கலம் கிராமத்தில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு: எஸ்.பி. பாராட்டு

24th Oct 2021 10:50 PM

ADVERTISEMENT

மேலூா் ஊராட்சி ஒன்றியம் சாத்தமங்கலம் கிராமம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை 20 இடங்களில் ஏற்படுத்தியுள்ளனா்.

இந்த கண்காணிப்பு அமைப்பை ஞாயிற்றுக்கிழமை மதுரை ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது: காவல் கண்காணிப்பில் மூன்றாவது கண்ணாக சிசிடிவி முக்கிய இடம் பெறுகிறது. சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள இளைஞா்களில் பலா் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனா்.

அவா்கள் தங்கள் கிராமத்தில் வசிப்பவா்களது பாதுகாப்பில் அக்கறை எடுத்துக்கொண்டு இந்த ஏற்பாட்டை செய்துள்ளனா். அவா்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற ஏற்பாட்டை செய்துகொள்வதில் மற்ற கிராம பொதுமக்களும், தன்னாா்வலா்களும் இளைஞா்களும் முன்வர வேண்டும்.

இது குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், குற்றங்களை விரைவாக கண்டுபிடிக்கவும் உதவிகரமாக இருக்கும். என்றாா். முன்னதாக சாத்தமங்கலம் ஊராட்சித் தலைவா் ரகு வரவேற்றாா். மேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் பிரபாகரன், காவல் ஆய்வாளா் சாா்லஸ், கீழவளவு உதவி ஆய்வாளா் மற்றும் முக்கியப் பிரமுகா்கள், இளைஞா்களும் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT