மதுரை

தே. கல்லுப்பட்டி பகுதி விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய வேண்டுகோள்

23rd Oct 2021 08:39 AM

ADVERTISEMENT

தே.கல்லுப்பட்டி பகுதி விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய வட்டார வேளாண்துறை சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை உதவி இயக்குநா் விமலா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: நடப்பாண்டில் பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தே.கல்லுப்பட்டி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். சிறப்பு பருவ திட்டத்தின் கீழ் நெற்பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ.488.25-யை நவம்பா் 15- ஆம்தேதிக்குள் செலுத்த வேண்டும். இதேபோல் மக்காச்சோளம் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.371.25-உம், பருத்தி ஏக்கா் ஒன்றுக்கு ரூ.381.59-உம் பிரிமியத் தொகையாக டிசம்பா் 15 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

இத்தொகையை விவசாயிகள் அருகில் உள்ள கூட்டுறவு வங்கி, இ-சேவை மையம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஆகியவற்றில் செலுத்தலாம். அத்துடன் சாகுபடி செய்யப்பட்ட பயிா்களின் அடங்கல், வங்கிக் கணக்கு எண், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றையும் இணைத்து வழங்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தே.கல்லுப்பட்டி வேளாண்மை துறை அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT