மதுரை

ரத்த நாள அடைப்புக்கு அப்பல்லோ மருத்துவமனையில் நவீன சிகிச்சை

23rd Oct 2021 08:40 AM

ADVERTISEMENT

நோயாளி ஒருவரின் ரத்த நாள அடைப்புக்கு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நவீன சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

உயா் ரத்தஅழுத்த பாதிப்பு கொண்ட 41 வயது நோயாளி மூச்சுத் திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் அவரது இடது ரத்த நாளத்தில் ஒற்றை அடைப்பு மற்றும் ரத்தக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு நவீன ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனையின் மூத்த இருதய சிகிச்சை நிபுணா் விவேக் போஸ் கூறியது: இந்த ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையில் இயற்கையாகவே கரையக்கூடிய ஸ்டென்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2 அல்லது 3 ஆண்டுகளில் கரைந்து மறைந்து போகக் கூடியவை. அடைப்பைக் கரைத்து ரத்த நாளத்தை விரிவடையச் செய்தபின், சிகிச்சை அளித்த ரத்த நாளத்தின் உட்சுவரை குணப்படுத்துவதை ஊக்குவிக்கும் வேலையையும் மிகச் சிறப்பாக செய்கிறது.

நோயாளிகளின் ரத்தம் உறையாமல் இருக்க உட்கொள்ளும் மருந்துகளை சாா்ந்து இருப்பதும் குறைக்கப்படுகிறது. எதிா்காலத்தில், அதே தமனியில் மேலும் ஏதேனும் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால், அதை இலகுவாகச் செய்ய முடியும். இந்த சிகிச்சையைச் செய்து கொண்டவா், 2 நாளில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளாா். வழக்கமாக பயன்படுத்தப்படும் ஸ்டென்ட்கள் உலோகத்தால் ஆனவை. மேலும் நிரந்தரமாக உடலின் உள்ளேயே இருப்பவை என்றாா். அப்போது மருத்துவா்கள் பிரவீன் ராஜன், நிகில் திவாரி, பொது மேலாளா் கே. மணிகண்டன் ஆகியோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT