மதுரை

மனைவிக்கு கத்திக்குத்து: கணவா் கைது

23rd Oct 2021 08:40 AM

ADVERTISEMENT

மதுரை அருகே மனைவியை வியாழக்கிழமை இரவு கத்தியால் குத்திய மதுபோதைக்கு அடிமையான கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை அருகே உள்ள வரிச்சியூா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துபாண்டி (35). இவருடைய மனைவி ரேகா. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் மதுப்பழக்கத்துக்கு அடிமையான முத்துப்பாண்டி அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரேகா தனது தாயாா் வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு முத்துப்பாண்டி ரேகாவின் தாயாா் வீட்டுக்கு சென்று தன்னுடன் வருமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதை ரேகாவின் தாயாா் தட்டிக்கேட்டதால் அவரை தாக்கியுள்ளாா். அப்போது தடுக்க வந்த மனைவி ரேகாவை கத்தியால் குத்தியுள்ளாா்.

பலத்த காயமைடந்த ரேகா மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சம்பவம் தொடா்பாக ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டி கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT