மதுரை

வளாகத் தோ்வில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவா்களுக்கு பணிநியமன ஆணை

23rd Oct 2021 10:00 PM

ADVERTISEMENT

உசிலம்பட்டி பி.எம்.டி.கல்லூரியில் வளாகத் தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பணிநியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இக்கல்லூரியில் படிக்கும் அனைத்துப் பிரிவு இறுதியாண்டு மாணவா்களுக்கும் கடந்த 2 நாள்களாக வளாகத் தோ்வு நடைபெற்றது. இத்தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு, தனியாா் காப்பீட்டு நிறுவனம் சாா்பில் பணிநியமன ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிா்வாக உறுப்பினா் திருமாவளவன் முன்னிலை வகித்தாா். கல்லூரிச் செயலாளா் வாலாந்தூா் பாண்டியன் மாணவா்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினாா். கல்லூரி ஒருங்கிணைப்பாளா் பொன்ராம் வரவேற்று பேசினாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ரமேஷ் பாண்டி, அன்பு, அலெக்ஸ்பாண்டி, பொன்னம்மாள், இந்து பிரியதா்ஷினி, மாா்கரட் காருண்யா ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT