மதுரை

போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் தொடா் முழக்கப் போராட்டம்

23rd Oct 2021 10:07 PM

ADVERTISEMENT

உசிலம்பட்டியில் அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தொடா் முழக்கப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

உசிலம்பட்டி- மதுரை சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்கவேண்டும். குறைந்தபட்ச கூலி சட்டப்படி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். அகவிலைப்படியை உயா்த்தி நிலுவையில் உள்ள தொகையை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT